Selected

Original Text
Jan Turst Foundation

Available Translations

75 Al-Qiyāmah ٱلْقِيَامَة

< Previous   40 Āyah   The Resurrection      Next >  

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
In the name of Allah, Most Gracious, Most Merciful.

75:1 لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَـٰمَةِ
75:1 கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். - Jan Turst Foundation (Tamil)

75:2 وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ
75:2 நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். - Jan Turst Foundation (Tamil)

75:3 أَيَحْسَبُ ٱلْإِنسَـٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥ
75:3 (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? - Jan Turst Foundation (Tamil)

75:4 بَلَىٰ قَـٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّىَ بَنَانَهُۥ
75:4 அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். - Jan Turst Foundation (Tamil)

75:5 بَلْ يُرِيدُ ٱلْإِنسَـٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥ
75:5 எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான். - Jan Turst Foundation (Tamil)

75:6 يَسْـَٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَـٰمَةِ
75:6 "கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான். - Jan Turst Foundation (Tamil)

75:7 فَإِذَا بَرِقَ ٱلْبَصَرُ
75:7 ஆகவே, பார்வையும் மழுங்கி- - Jan Turst Foundation (Tamil)

75:8 وَخَسَفَ ٱلْقَمَرُ
75:8 சந்திரன் ஒளியும் மங்கி- - Jan Turst Foundation (Tamil)

75:9 وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ
75:9 சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும். - Jan Turst Foundation (Tamil)

75:10 يَقُولُ ٱلْإِنسَـٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّ
75:10 அந்நாளில் "(தப்பித்துக் கெள; ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான். - Jan Turst Foundation (Tamil)

75:11 كَلَّا لَا وَزَرَ
75:11 "இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!" (என்று கூறப்படும்). - Jan Turst Foundation (Tamil)

75:12 إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ
75:12 அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு. - Jan Turst Foundation (Tamil)

75:13 يُنَبَّؤُا۟ ٱلْإِنسَـٰنُ يَوْمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
75:13 அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான். - Jan Turst Foundation (Tamil)

75:14 بَلِ ٱلْإِنسَـٰنُ عَلَىٰ نَفْسِهِۦ بَصِيرَةٌ
75:14 எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான். - Jan Turst Foundation (Tamil)

75:15 وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥ
75:15 அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்! - Jan Turst Foundation (Tamil)

75:16 لَا تُحَرِّكْ بِهِۦ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِۦٓ
75:16 (நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள். - Jan Turst Foundation (Tamil)

75:17 إِنَّ عَلَيْنَا جَمْعَهُۥ وَقُرْءَانَهُۥ
75:17 நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன. - Jan Turst Foundation (Tamil)

75:18 فَإِذَا قَرَأْنَـٰهُ فَٱتَّبِعْ قُرْءَانَهُۥ
75:18 எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள். - Jan Turst Foundation (Tamil)

75:19 ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥ
75:19 பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது. - Jan Turst Foundation (Tamil)

75:20 كَلَّا بَلْ تُحِبُّونَ ٱلْعَاجِلَةَ
75:20 எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள். - Jan Turst Foundation (Tamil)

75:21 وَتَذَرُونَ ٱلْـَٔاخِرَةَ
75:21 ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள். - Jan Turst Foundation (Tamil)

75:22 وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ
75:22 அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். - Jan Turst Foundation (Tamil)

75:23 إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ
75:23 தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும். - Jan Turst Foundation (Tamil)

75:24 وَوُجُوهٌ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌ
75:24 ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும். - Jan Turst Foundation (Tamil)

75:25 تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ
75:25 இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும். - Jan Turst Foundation (Tamil)

75:26 كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ
75:26 அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால், - Jan Turst Foundation (Tamil)

75:27 وَقِيلَ مَنْ ۜ رَاقٍ
75:27 "மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது. - Jan Turst Foundation (Tamil)

75:28 وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ
75:28 ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான். - Jan Turst Foundation (Tamil)

75:29 وَٱلْتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ
75:29 இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும். - Jan Turst Foundation (Tamil)

75:30 إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمَسَاقُ
75:30 உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது. - Jan Turst Foundation (Tamil)

75:31 فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ
75:31 ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை. - Jan Turst Foundation (Tamil)

75:32 وَلَـٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ
75:32 ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான். - Jan Turst Foundation (Tamil)

75:33 ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهْلِهِۦ يَتَمَطَّىٰٓ
75:33 பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான். - Jan Turst Foundation (Tamil)

75:34 أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
75:34 கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்! - Jan Turst Foundation (Tamil)

75:35 ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓ
75:35 பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான். - Jan Turst Foundation (Tamil)

75:36 أَيَحْسَبُ ٱلْإِنسَـٰنُ أَن يُتْرَكَ سُدًى
75:36 வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா? - Jan Turst Foundation (Tamil)

75:37 أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِىٍّ يُمْنَىٰ
75:37 (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? - Jan Turst Foundation (Tamil)

75:38 ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ
75:38 பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான். - Jan Turst Foundation (Tamil)

75:39 فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ
75:39 பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான். - Jan Turst Foundation (Tamil)

75:40 أَلَيْسَ ذَٰلِكَ بِقَـٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْـِۧىَ ٱلْمَوْتَىٰ
75:40 (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா? - Jan Turst Foundation (Tamil)