Selected

Original Text
Jan Turst Foundation

Available Translations

92 Al-Layl ٱللَّيْل

< Previous   21 Āyah   The Night      Next >  

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
In the name of Allah, Most Gracious, Most Merciful.

92:1 وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ
92:1 (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக - Jan Turst Foundation (Tamil)

92:2 وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
92:2 பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக- - Jan Turst Foundation (Tamil)

92:3 وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ
92:3 ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக- - Jan Turst Foundation (Tamil)

92:4 إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ
92:4 நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும். - Jan Turst Foundation (Tamil)

92:5 فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ
92:5 எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து, - Jan Turst Foundation (Tamil)

92:6 وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ
92:6 நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ, - Jan Turst Foundation (Tamil)

92:7 فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ
92:7 அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம். - Jan Turst Foundation (Tamil)

92:8 وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ
92:8 ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ, - Jan Turst Foundation (Tamil)

92:9 وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ
92:9 இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ, - Jan Turst Foundation (Tamil)

92:10 فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ
92:10 அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம். - Jan Turst Foundation (Tamil)

92:11 وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ
92:11 ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது. - Jan Turst Foundation (Tamil)

92:12 إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ
92:12 நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது. - Jan Turst Foundation (Tamil)

92:13 وَإِنَّ لَنَا لَلْـَٔاخِرَةَ وَٱلْأُولَىٰ
92:13 அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும். - Jan Turst Foundation (Tamil)

92:14 فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ
92:14 ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன். - Jan Turst Foundation (Tamil)

92:15 لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى
92:15 மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான். - Jan Turst Foundation (Tamil)

92:16 ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ
92:16 எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான். - Jan Turst Foundation (Tamil)

92:17 وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى
92:17 ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார். - Jan Turst Foundation (Tamil)

92:18 ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ
92:18 (அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார். - Jan Turst Foundation (Tamil)

92:19 وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍ تُجْزَىٰٓ
92:19 மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும். - Jan Turst Foundation (Tamil)

92:20 إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ
92:20 மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்). - Jan Turst Foundation (Tamil)

92:21 وَلَسَوْفَ يَرْضَىٰ
92:21 வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார். - Jan Turst Foundation (Tamil)