Selected
Original Text
Jan Turst Foundation
Abdullah Yusuf Ali
Abdul Majid Daryabadi
Abul Ala Maududi
Ahmed Ali
Ahmed Raza Khan
A. J. Arberry
Ali Quli Qarai
Hasan al-Fatih Qaribullah and Ahmad Darwish
Mohammad Habib Shakir
Mohammed Marmaduke William Pickthall
Muhammad Sarwar
Muhammad Taqi-ud-Din al-Hilali and Muhammad Muhsin Khan
Safi-ur-Rahman al-Mubarakpuri
Saheeh International
Talal Itani
Transliteration
Wahiduddin Khan
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
In the name of Allah, Most Gracious, Most Merciful.
91:1
وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا
91:1
சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக - Jan Turst Foundation (Tamil)
91:2
وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا
91:2
(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக- - Jan Turst Foundation (Tamil)
91:3
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا
91:3
(சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக- - Jan Turst Foundation (Tamil)
91:4
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا
91:4
(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக- - Jan Turst Foundation (Tamil)
91:5
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا
91:5
வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக- - Jan Turst Foundation (Tamil)
91:6
وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا
91:6
பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக- - Jan Turst Foundation (Tamil)
91:7
وَنَفْسٍ وَمَا سَوَّىٰهَا
91:7
ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக- - Jan Turst Foundation (Tamil)
91:8
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا
91:8
அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான். - Jan Turst Foundation (Tamil)
91:9
قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا
91:9
அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார். - Jan Turst Foundation (Tamil)
91:10
وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا
91:10
ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான். - Jan Turst Foundation (Tamil)
91:11
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ
91:11
'ஸமூது' (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர். - Jan Turst Foundation (Tamil)
91:12
إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا
91:12
அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது, - Jan Turst Foundation (Tamil)
91:13
فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَـٰهَا
91:13
அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: "இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்" என்று கூறினார். - Jan Turst Foundation (Tamil)
91:14
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا
91:14
ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான். - Jan Turst Foundation (Tamil)
91:15
وَلَا يَخَافُ عُقْبَـٰهَا
91:15
அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை. - Jan Turst Foundation (Tamil)