Selected
                        Original Text
                        
                    
                
                    
                        Jan Turst Foundation
                        
                        
                        
                    
                
                Abdullah Yusuf Ali
Abdul Majid Daryabadi
Abul Ala Maududi
Ahmed Ali
Ahmed Raza Khan
A. J. Arberry
Ali Quli Qarai
Hasan al-Fatih Qaribullah and Ahmad Darwish
Mohammad Habib Shakir
Mohammed Marmaduke William Pickthall
Muhammad Sarwar
Muhammad Taqi-ud-Din al-Hilali and Muhammad Muhsin Khan
Safi-ur-Rahman al-Mubarakpuri
Saheeh International
Talal Itani
Transliteration
Wahiduddin Khan
                    بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
                
                
                    In the name of Allah, Most Gracious, Most Merciful.
                
            
                    81:1
                    إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ
                
                
                
                
                
                    81:1
                    சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:2
                    وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ
                
                
                
                
                
                    81:2
                    நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:3
                    وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ
                
                
                
                
                
                    81:3
                    மலைகள் பெயர்க்கப்படும் போது-  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:4
                    وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ
                
                
                
                
                
                    81:4
                    சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:5
                    وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ
                
                
                
                
                
                    81:5
                    காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:6
                    وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ
                
                
                
                
                
                    81:6
                    கடல்கள் தீ மூட்டப்படும்போது-  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:7
                    وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ
                
                
                
                
                
                    81:7
                    உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:8
                    وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ
                
                
                
                
                
                    81:8
                    உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:9
                    بِأَىِّ ذَنۢبٍ قُتِلَتْ
                
                
                
                
                
                    81:9
                    "எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று-  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:10
                    وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ
                
                
                
                
                
                    81:10
                    பட்டோலைகள் விரிக்கப்படும் போது-  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:11
                    وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ
                
                
                
                
                
                    81:11
                    வானம் அகற்றப்படும் போது-  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:12
                    وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ
                
                
                
                
                
                    81:12
                    நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:13
                    وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ
                
                
                
                
                
                    81:13
                    சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:14
                    عَلِمَتْ نَفْسٌ مَّآ أَحْضَرَتْ
                
                
                
                
                
                    81:14
                    ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:15
                    فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ
                
                
                
                
                
                    81:15
                    எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:16
                    ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ
                
                
                
                
                
                    81:16
                    முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:17
                    وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ
                
                
                
                
                
                    81:17
                    பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:18
                    وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ
                
                
                
                
                
                    81:18
                    மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:19
                    إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
                
                
                
                
                
                    81:19
                    நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:20
                    ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍ
                
                
                
                
                
                    81:20
                    (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:21
                    مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ
                
                
                
                
                
                    81:21
                    (வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:22
                    وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ
                
                
                
                
                
                    81:22
                    மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:23
                    وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ
                
                
                
                
                
                    81:23
                    அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:24
                    وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍ
                
                
                
                
                
                    81:24
                    மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:25
                    وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَـٰنٍ رَّجِيمٍ
                
                
                
                
                
                    81:25
                    அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:26
                    فَأَيْنَ تَذْهَبُونَ
                
                
                
                
                
                    81:26
                    எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:27
                    إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَـٰلَمِينَ
                
                
                
                
                
                    81:27
                    இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:28
                    لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ
                
                
                
                
                
                    81:28
                    உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    81:29
                    وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَـٰلَمِينَ
                
                
                
                
                
                    81:29
                    ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.  - Jan Turst Foundation (Tamil)